ஹூஸ்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் சென்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவது குறித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தொழில் நகரமான ஹூஸ்டனுக்கு சென்ற அவர், அந்நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சருக்கு வீரத்தமிழன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் ஹூஸ்டன் நகர சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதலமைச்சர் நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். நியூயார்க் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
Discussion about this post