நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும் அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என அப்போது அனைத்துக் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Discussion about this post