மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. ஆனால் தரிசனத்துக்கு பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ள நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு இரவு நடை அடைக்கப்படும். பின்னர் நாளை காலை கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மண்டல பூஜை தொடங்குவதை அடுத்து, சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மண்டல பூஜை விழா குறித்து பேசிய கேரள சட்டத்துறை அமைச்சர் பாலன், சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post