ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில் சென்னை அணி நிர்வாகம் 5 வீரர்களை நீக்கியுள்ளது.இரண்டாண்டு தடைகளுக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் தொடரில் 2ம் இடம் பிடித்தது.
மேலும் விரைவில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை அணி நிர்வாகம் தனது அணியில் 5 வீரர்கள் நீக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்தது. இதனால் யார் அந்த 5 வீரர்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில் மோகித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, துருவ் சோரே, சைத்தன்யா பிஸ்னோ ஆகியோர் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை நீக்கியதன் மூலம் சென்னை அணியின் கையிருப்பு தொகை ரூ. 14.60 கோடியாக உள்ளது. இதனைக் கொண்டு வருகிற ஏலத்தில் அந்த அணி நிர்வாகம் புதிய வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post