அமெரிக்க சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்க – இந்திய SME கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
வாஷிங்டன் டிசியில் உள்ள வாட்டர் கேட் விடுதியில் அமெரிக்க – இந்திய SME கவுன்சில் நிர்வாகிகளை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின் போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மற்றும் நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், அமெரிக்க – இந்திய SME கவுன்சில் தலைமை செயலக் அலுவலர் எலிசா புலிவர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Discussion about this post