4 லட்சத்து ஐம்பதாயிரம் ,பாலியல் குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முதல் முறையாக பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளத்தை தொடங்கி உள்ளது.
இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈவ் டீசிங் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்று உள்ளன.
இதில் தண்டனை பெற்ற 4 லட்சத்து ஐம்பதாயிரம் பேர்கள் உள்ளனர். 3 லட்சத்து ஐம்பதாயிரம் பேரின் புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளது.
இந்த ஆவணங்களை உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன், இணைந்து தேசிய குற்றப்பதிவு ஆணையமும் பராமரிக்க உள்ளது.
மேலும் 2005 ஆம் ஆண்டிலிருந்து தகவல்கள் பதிவேற்றப்பட உள்ளன. ஆவணத்தில் ஒவ்வொருவருக்கும் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைரேகை விவரங்கள் உள்ளன. எனினும், ஆவணமானது எந்த நபரின் தனியுரிமையையும் சமரசம் செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கை என்றார்.
Discussion about this post