ஜப்பான் நாட்டில் உள்ள பெண்கள், அலுவலக பணிக்கு செல்லும் போது கட்டாயம் கண்ணாடி அணிந்துகொண்டு செல்லக்கூடாது என அந்நாட்டு நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
ஜப்பான் நாட்டில் பெண்கள் கண்ணாடிகள் அணிந்து கொண்டு அலுவலக வேலைக்கு வரக்கூடாது என்று ஜப்பான் நாட்டின் நிறுவனங்கள் கடந்த வாரத்தில் தடை விதித்திருக்கின்றன. கண்ணாடி அணிந்து கொண்டு அலுவலகம் வருகின்ற பெண்கள் நட்பில்லாத பார்வை தன்மை உடையவர்களாகவும், பெண்களின் முக அழகை குறைப்பது போலவும், கண்ணாடி அணியும் பெண்கள் மட்டும் அதிபுத்திசாலிகளாக தெரிவது போல தோற்றமளிப்பதாகவும் கூறி, ஜப்பான் நாடு, பெண்கள் கண்ணாடி அணிவதற்கு தடை விதித்து உள்ளது.
ஜப்பான் நாடு முழுவதும், பெண்கள் இந்த தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். பெண்கள் கண்ணாடி அணிய தடை எதற்கு என்று கேள்வி கேட்டு, சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவிகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், ஜப்பான் நாட்டின் பெரும்பாலான நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுகின்றவர்கள் என்ன மாதிரி உடை அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது. அந்த வகையில், ஆண்கள் சூட் மற்றும் கருப்பு வண்ண ஷூக்களை அணிந்து வர வேண்டும், பெண்கள் ஸ்கர்ட்ஸ் என்னும் குட்டைப் பாவாடை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஹைஹீல்ஸ் அணிவதன் தீமைகள் பற்றி ஜப்பான் நாட்டின் விளம்பர மாடல் அழகி தனது எதிர்ப்பினை, ட்வீட் வாயிலாக வெளிப்படுத்தினார். இதையடுத்து ஜப்பான் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post