நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் அலகாபாத்தில் பிறந்த நேரு, நாடு விடுதலை பெற்ற நாளில் முதல் பிரதமராகப் பதவியேற்றார். 1964 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தார். மனிதருள் மாணிக்கம், ஆசிய ஜோதி என்றெல்லாம் அழைக்கப்பட்ட நேருவின் 130-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி சாந்திவனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் நேரு நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post