இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதரப்பாக உள்ளதால், அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கில் இழப்பும், அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுவதாக கூறினார்.
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதிக புகை வெளியிடும் தொழிற்சாலைகளை தூய்மையாக்கவும் எதுவும் செய்யவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த நாடுகள் கடலில் போடும் அத்தனை குப்பைகளும் லாஸ் ஏஞ்சல்சுக்கு மிதந்துவந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு சுத்தமான காற்று உள்ளதாக அவர் கூறினார்.
Discussion about this post