டெல்லியில் உள்ள ஜே.என்.யு. எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், விடுதிக்கான கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களால் ஆறு மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விடுதிக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து விடுதிக்கான கட்டணத்தை உயர்த்துவது, ஆடை கட்டுப்பாடு, போன்றவற்றை இறுதி செய்யும் குழுவில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post