மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நடப்பாண்டு மற்றும் அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்காக 565 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபரி நீரை எடுத்துச் செல்வதற்கான பைப் லைன்கள் பதிக்க 241 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சரபங்கா திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், பணி விரைவில் தொடங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 555 மில்லியன் கன அடி உபரி நீர் எடப்பாடி பகுதியில் உள்ள 33 குளங்களுக்கும் எம்.காளிபட்டி பகுதியில் உள்ள 67குளங்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 100 நீர் நிலைகளில் நிரப்பப்படும். சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post