புளியரை மூலப்பேரி நீர்த்தேக்கம் வடகிழக்கு பருவமழை காரணமாக நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புளியரையில் மூலப்பேரி நீர் தேக்கம் உள்ளது. இந்த நீர்தேக்கத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, மூலப்பேரி நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழு கொள்ளளவான 25 அடியை அணை எட்டிள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Discussion about this post