தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் உலகத் தரத்தில் மருத்துவ வசதி வழங்கும் வகையில் தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த பூங்கா மூலம் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சோதனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில், இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்த போதிலும், உள்நாட்டில் தொழிற்சாலை மிகவும் குறைவாக காணப்படுகிறது. பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம், இறக்குமதி செய்யும் நிலையில் மாற்றம் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post