திருவண்ணாமலையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடமாடும் அம்மா அவசர கால மருத்துவ சேவை ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டது…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், செய்யார் வட்டாரத்தில் மேல் சிஷமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கால்நடை மருத்துவ துறையின் அம்மா நடமாடும் அவசர கால மருத்துவ ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கால் நடை மருத்துவ துறையின் மூலம் துவங்கப்பட்ட நடமாடும் அவசர ஊர்தியை விவசாய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 26,39 ,48,000 மதிப்பீட்டில், 28 குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அவசர கால வாகன சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post