மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, இது குறித்து பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றபோதும், யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் இரு கட்சிகளிடமும் பிடிவாதம் இருப்பதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் 105 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோசியாரி அழைத்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றால் திங்கட்கிழமைக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் நிலைமை பற்றி விவாதிக்க மும்பையில் பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதே நேரத்தில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் 56 பேரும் மும்பை அருகே ஒரு தீவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஆதித்ய தாக்கரே இரவு முழுவதும் அவர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
Discussion about this post