சுரண்டை தென்காசி பகுதிகளில் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடங்களை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை மற்றும் குறும்பலாப்பேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக அங்கன்வாடி கட்டடங்கள் கட்டப்பட்டன.
10 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த பணிகள் யாவும் தற்போது முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இருந்தது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.புதிதாக அங்கன்வாடி கட்டிடங்களை கட்டித் தந்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் .
Discussion about this post