மாகாராஷ்டிராவில் சட்டமன்ற பதவிகாலம் முடிவடைந்த நிலையில், இன்று ஆளுநரை சந்திக்க உள்ள பாஜக, ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தம் 161 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றிய நிலையில், ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. சுழற்சி முறையில் இரு கட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் பதவி வகிக்கும் சிவசேனா முடிவை பாஜக ஏற்கவில்லை. இதனையடுத்து 54 இடங்களை கைப்பற்றிய தேசியவாத காங்கிரஸின் ஆதரவை பெற இரு கட்சிகளும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க இரு கட்சிகளும் விரும்பாத நிலையில், சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இந்நிலையில், இன்று ஆளுநரை சந்திக்கும் பாஜக தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post