இந்தியாவிலிருந்து கர்தார்பூருக்கு செல்லும் சீக்கிய பக்தர்களுக்கான புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களில் புனித தலமான கர்தார்பூர் சாஹிப்பிற்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யோக வழித்தடம் இன்று திறக்கப்பட உள்ளது. சீக்கிய மதகுருவான குருநானக்கின் 550 வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி இந்த புதிய வழிதடத்தை இன்று திறந்து வைக்க உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் ஏராளாமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும், அரசியல் சூழ்நிலையின் காரணமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post