உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர், டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்களை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து, அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி, இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post