துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறையாக பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அவர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து, உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அலுவலர்களுடன் விவாதிக்க இருக்கிறார்.
பசுமை வழிச்சாலையிலிருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற துணை முதலமைச்சருக்கு கட்சி நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர். விமான நிலையத்திலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக, துணை முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார். பசுமை வழிச்சாலையிலுள்ள துணை முதலமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Discussion about this post