குடிநீர் தொட்டி மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ளாமல் இருந்ததற்காக இதுவரி 12 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மண்டல அலுவலர் பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு BEST MANAGMENT ASSOCIATION சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாமை நடைபெற்றது. தலைமை பூச்சியல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி மற்றும் தனியார் ஊழியர்கள் கொசு ஒழிப்பு இயந்திரங்களுடன் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல அலுவலர் பரந்தாமன், இதுவரை டெங்கு உற்பத்திக்கு காரணமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு 12 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள 10 உபகரணங்கள் வழங்கி இருப்பதாகவும், அது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post