திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஓய்வு பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு அடுத்த அனக்காவூரைச் சேர்ந்தவர் கட்டிட கூலித் தொழிலாளி ஒருவருக்கு 13 வயது இருக்கிறார். அவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தாயார் துப்புரவு பணிக்கு செல்லும்போது அவரது மகளை உதவிக்கு அழைத்து செல்வார். அங்கு வழக்கமாக வரும் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் நடராஜன் அந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு அருகில் நடராஜன் வீடு இருப்பதால் அந்த மாணவி நடராஜன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி அடிக்கடி வீட்டுக்கு வருவதை சாதகமாக்கிகொண்ட நடராஜன் சுமார் 10 மாதங்களாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் மாணவியை
செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாணவி 9 மாதம் கர்ப்பமாக உள்ளார் எனவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கோமளவல்லி போக்சோ சட்டத்தின்கீழ் நடராஜனை கைது செய்தனர்.
Discussion about this post