நாகை மாவட்டத்தில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாய பெண்கள் கவனத்தை ஈர்க்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீனம்பநல்லூர்,திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருமணங்குடி,மடப்புரம், எட்டுக்குடி,கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவுப்பணி, வயல் வரப்புகளை சீரமைத்தல்,உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் களைப்பு தெரியாமல் இருக்க நடவு பணிகள் மேற்கொள்ளும் விவசாயப் பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களை
குழுவாக பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post