சென்னை காரப்பாக்கத்தில் தேநீர்க்கடையில் நின்றிருந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த முரளி என்பவர் காரப்பாக்கத்தில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், முரளியின் கழுத்தைக் கத்தியால் அறுத்து விட்டுத் தப்பியோடி விட்டார். வலியால் துடித்த முரளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முரளியைச் சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணகி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கொலையாளி பற்றி விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post