ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மற்றும் அதன் கூட்டமைப்பு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான, ஆசியானைச் சேர்ந்த 10 நாடுகள் மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையிலான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியா சுட்டிக்காட்டிய சில குறிப்பிட்ட அம்சங்கள் சரி செய்யப்படாததால் ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் தாக்குர் சிங் இந்த தகவலை தெரிவித்தார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய சந்தைகளில் சீன வேளாண் மற்றும் தொழில்துறை பொருட்கள் குவியக் கூடும் எனவும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் 3 நாட்கள் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு இந்தியா திரும்பினார்.
Discussion about this post