பெரு தலைநகர் லிமாவில் காளைச்சண்டை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி நடந்த பேரணியில் காளைகள் போலவும் சிவப்பு துணி மூலம் சீண்டி காளையை ஆயுதத்தால் குத்தும் வீரர்கள் போன்றும் சிலர் நடித்துக்காட்டினர். இந்த போட்டியால் காளைகள் அதிகப்படியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொல்லப்படுவதாக கூறி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே காளைச் சண்டை நிகழ்ச்சியை காணச் சென்றோருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த காளை சண்டை லத்தின் அமெரிக்காவில் ஸ்பெயினியர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post