பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்றப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி மறுசுழற்சிக்கு அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வில்லிவாக்கம் பகுதியில் தொடங்கிய பிளாஸ்டிக் நடைபயனம் என்னும் நிகழ்ச்சியானது, 25 கிமி தூரம் கடந்து பெசண்ட் நகர் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அல்பி ஜான், இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் ஈடுபடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் இதில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post