பழனி முருகன் கோயிலில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 22 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது.
பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தினமும் தேவையான குடிநீர் தேவையை, பழனி நகராட்சி சார்பில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனாலும், தண்ணீர் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்நிலையில், பழனி கோவிலுக்கு மட்டும் பிரத்யேகமாக குடிநீர் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி 22 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலாறு அணையில் இருந்து கால்வாய் அமைத்து 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா கோவிலுக்கு சொந்தமான அன்பு இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post