மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை ஏரி, குளங்களை நிரப்பும் திட்டத்திற்கு 611 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரியாக வெளியேறப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியேறும் உபரி நீரை எடப்பாடி, ஓமலூர் உட்பட 4 பகுதிகளில் உள்ள ஏரி குளங்களை நிரப்பும் வகையில் 611 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நங்கவள்ளி, வனவாசி, தரமங்கலம், கொங்கனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Discussion about this post