மகாராஷ்டிராவில், புதிய அரசு அமைக்கப்போவது யார் என்பதில், இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடிக்கின்றது. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் தரவேண்டும், அமைச்சர் பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜனதா நிராகரித்ததால் இந்த இழுபறி தொடர்கிறது. இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. சிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை டெல்லியில் சந்தித்து பேச சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒருவேளை சிவசேனா ஒத்துழைக்கவில்லை என்றால், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
Discussion about this post