தெலங்கானா மாநிலம் கம்மத்தில் 20 விழுக்காடு கமிசன் அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளைப் பொதுமக்களிடம் விற்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துத் தனிப்படையினர் மாறு வேடங்களில் கண்காணித்துத் தரகர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒவ்வொன்றும் பத்துக் கட்டுகள் கொண்ட 320 பண்டல்கள் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 6 கோடியே 40 லட்ச ரூபாயாகும். இந்தக் கள்ள நோட்டுக்கள் எங்கு அச்சடிக்கப்பட்டன? இவற்றைப் புழக்கத்துக்கு அனுப்பும் கும்பலில் எத்தனை பேர் உள்ளனர்? என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாளில் மிகப் பெருமளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post