உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் இம்மாதம் 17-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என தெரிகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி, ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் ஏறக்குறைய அயோத்தி வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் இம்மாதம் 17ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. ஆகையால், நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Discussion about this post