ஈரோடு மாவட்டம் பவானிசாகர்அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து, 104 அடியை எட்டுவதால், பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெயத பலத்த மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 96 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 102 அடியை தொட்டது. இந்நிலையில், உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதையடுத்து, 102 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.69 அடியாகவும், நீர் இருப்பு 31.7 டிஎம்சி யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்த 764 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 2 ஆயிரத்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post