மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் பருவமழையால், 18அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் அணை 16அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 273 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவியில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க 4வது நாளாக தடை நீட்டிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ள நிலையில், அருவியில் குளிக்க முடியாமல் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
Discussion about this post