வரி ஏய்ப்பு புகார் காரணமாக உடல் எடை குறைப்பு மற்றும் அழகு மேம்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கலர்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உடல் எடை குறைப்பு மற்றும் அழகு மேம்பாடு பணிகளை செய்து வருகிறது. பல்வேறு முன்னணி நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து வரும் இந்த நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து தமிழகம், ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் உள்ள நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட கிளைகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் தியாகராய நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னர் முழுவிவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Discussion about this post