கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் – இரவு போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்துவதற்கு பிசிசிஐ சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Discussion about this post