தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து மஞ்சளாறு அணைக்கு வரும் 57 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையால் மஞ்சளார் அணை நிரம்பியது. இதனால் பெரியகுளம் அணையின் நீர் மட்டமானது மொத்த உயரம் 57 அடியில் 55 அடியை எட்டியது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர் வரத்து 57 கன அடியாக உள்ள நிலையில், வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435 புள்ளி 32 மில்லியன் கன அடியாக உள்ளது.
Discussion about this post