கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை மட்டும், ரசித்து விட்டு, திரும்பிச் சென்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணத்திற்காக இரண்டாவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க, பேருராட்சி நிர்வாகம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், அருவியில் குளிக்க முடியாத சுற்றுலா பயணிகள், அருவியின் அருகே நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
Discussion about this post