சவூதி அரேபியாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ‘எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்’ என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இன்று உரையாற்றும் பிரதமர் மோடி, ‘இந்தியாவில் அடுத்தது என்ன?’ என்று தலைப்பில் பேச உள்ளார்.
சவூதி அரேபியாவில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி, அந்நாட்டு மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின் போது, விமானப் போக்குவரத்து, கச்சா எண்ணெய், எரிவாயு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா-சவூதி அரேபியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ இந்தியாவுக்கு அதிகஅளவில் எண்ணெய் வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முதன்மையானது என்றும், பாதுகாப்பு, வணிகம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post