ஜெர்மனியில் இசைக்கருவியை மீட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயலால் சர்ச்சை எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் வங்காள வணிகர்களின் மாநாட்டிற்காக, 10 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி சென்றுள்ளார்.
அப்போது ஜெர்மனி நாட்டிலுள்ள ஃப்ரங்ஃபர்ட் நகரத்திற்குச் சென்ற மம்தா பானார்ஜி, தெருவோரத்தில் மிக்கி மவுஸ் உருவத்தில் இசைக்கருவி வைத்தவரிடம் சென்று, இசைக்கருவியை மீட்ட ஆரம்பித்தார். இது நெட்டிசன்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வங்காளிகள், மேற்கு வங்காளத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் களையாமல், முதலமைச்சர் மம்தா, வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்ப்பதாக எதிர்மறையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, வெளிநாட்டுக்காரர்களின் முதலீட்டை, மேற்கு வங்கத்தில் அதிகரிக்கச் செய்வதற்காக, இந்தச் சுற்றுப்பயணத்தை மம்தா பானர்ஜி செய்திருப்பதாக, அம்மாநில அரசு தெரிவித்த நிலையில், மம்தாவின் பயணம் தற்போது புதிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post