கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரியில் தடுப்பணைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், குடும்பத்துடன் வருகை தந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த 20ம் தேதிமுதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் பொதுப்பணிதுறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post