தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்பு வகைகளின் வியாபாரம் உச்சத்தை அடைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த ஆண்டை விட பட்டாசுகளின் விலை அதிகரித்துள்ள நிலையிலும், மக்கள் பட்டாசுகளை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகக் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் மற்றும் கோபுரங்களும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post