கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post