90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், பாஜக 39 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஜன்நாயக் ஜனாதா கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், இழுபறி நிலவுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜன்நாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா, நாளை கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அரியானாவில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக தான் நம்புவதாகவும், அதனை, ஜன்நாயக் ஜனதா கட்சி கொண்டு வரும் எனவும் கூறினார்.
Discussion about this post