புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், இடைத்தேர்தல் வெற்றியை நீதிமன்றம் இறுதி செய்யும் எனவும் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பரிசுப் பொருட்களை கொடுத்துதான் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
Discussion about this post