பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் விண்வெளிப் போட்டியைச் சமாளிக்கப் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் வணிக ரீதியிலான ராக்கெட்களைச் சீனா தயாரிக்க உள்ளது.
2017 ஆம் ஆண்டு, ஒரே ராக்கெட்டில், 104 செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்று, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி இந்தியாவின் இஸ்ரோ உலக சாதனை படைத்தது. இதனால், விண்வெளி வணிகச் சந்தையைத் தக்க வைத்துக்கொள்ளச் சீனா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான, இரு வணிகப் பயன்பாட்டு ராக்கெட்டுகளைச் சீனா தயாரிக்க உள்ளது.
இந்த ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும், ஒன்றரை டன் எடையுடன் ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கட்டமைக்கப்படுகின்றன. திட, திரவ எரிபொருட்களைக் கொண்டு இயங்கவல்ல வகையில் உருவாக்கப்படும் இத்தகைய ராக்கெட்டுகளை கட்டமைக்க 140 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியைப் பொதுமக்களிடம் இருந்தே திரட்டவும் சீனா முடிவு செய்திருக்கிறது.
Discussion about this post