கிரேக்க கணித விகிதத்தின் அடிப்படையில், புகழ்பெற்ற மாடலான ‘பெல்லா ஹடிட்’-தான் உலகிலேயே அழகான பெண் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“Golden Ratio of Beauty Phi Standards” என்ற கிரேக்க கணக்கீடுகளின் அடிப்படையில், புகழ்பெற்ற மாடலான ‘பெல்லா ஹடிட்’தான் உலகிலேயே அழகான பெண் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரேக்க கணிதத்தின் அடிப்படையிலும், அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞானிகள் உலகின் மிக அழகான பெண்ணை தேர்ந்து எடுத்து உள்ளார்கள். விஞ்ஞான முறையில் அழகை வரையறுக்க முயற்சிக்கும்போது, கிரேக்க அறிஞர்கள் பயன்படுத்திய தரங்களின்படி, முக விகிதங்களின் அளவீடுகள் கணக்கிடப்படுகின்றன. கிளாசிக் கிரேக்க கணக்கீடுகளுக்கு ஏற்ப ‘பியூட்டி ஃபை கோல்டன் விகிதம் ‘ அழகை வரையறுத்து உள்ளது.
பியூட்டி ஃபை கோல்டன் விகிதம் என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் போது உருவானது. கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள், தங்கள் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் போது, தங்களுக்கு உதவியாக கோல்டன் ரேஷியோ என அழைக்கப்படும் இந்த சமன்பாட்டைப் பயன்படுத்தினர்.
விஞ்ஞானிகள் ஒரு நபரை அழகாக மாற்றுவதை விளக்க, இந்த கணித சூத்திரத்தைத் பயன்படுத்தினர். ஒருவரின் முகத்தின் நீளம் மற்றும் அகலம் அளவிடப்படுகிறது. பின்னர் முடிவுகள் பிரிக்கப்படுகின்றன. கோல்டன் விகிதத்தின்படி, சிறந்த அழகான முகம் என்பது சுமார் 1.6 அளவு குறியீடு ஆகும்.
இந்த அளவீடுகள் நெற்றி கண்களுக்கு இடையில், கண்களுக்கு இடையில் இருந்து மூக்கின் அடிப்பகுதியிலும், மூக்கின் அடிப்பகுதியிலிருந்து கன்னத்தின் அடிப்பகுதியிலும் எடுக்கப்படுகின்றன. காதுகளின் நீளம் மூக்கின் நீளத்திற்கு சமமாகவும், கண்ணின் அகலம் கண்களுக்கு இடையிலான தூரத்திற்கு சமமாகவும் இருக்க வேண்டும்.
அன்மையில் லண்டனின் புகழ்பெற்ற முக அறுவை சிகிச்சை நிபுணரான ஜூலியன் டி சில்வா, அழகு சார்ந்த கிரேக்க கணித அளவீடுகளின்படி சோதனை செய்து, பெல்லா ஹடிட்தான் 94.5% ஒத்துப் போகிறார் என்று சான்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெல்லா ஹடிட்தான் உலகின் அழகிய பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கடுத்து, பாப் பாடகி பியான்சே இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடம் அமெரிக்க நடிகை ஹம்பர் ஹெர்டுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா கூறுகையில், “முகத்தின் அனைத்துக் கூறுகள், உடல் வடிவம் என அனைத்தையும் அளவிடும்போது, பெல்லா ஹடிட்தான் வெற்றியாளராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post