தொலைத்தொடர்பு உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்ற நிறுவனங்களுக்கு தொடர்பு கொள்ளும் தனது அன்லிமிடெட் கால் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு பதிலாக நிமிடத்திற்கு 6 பைசா என்ற அடிப்படையில் பல்வேறு ரூபாய் மதிப்புகளில் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்களிடையே ஒருபுறம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், இதற்கு ஈடாக வழங்கப்பட்ட இன்டர்நெட் சேவை மக்களை ஜியோவையே தொடர்ந்து பின்தொடர காரணமாக அமைந்தது.
மேலும் புதிய பிளானில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு முதல் 30 நிமிடம் இலவசம் என அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்நிலையில் தீபாவளி பரிசாக “unlimited call” சேவையை ஜியோ புதிய பிளான்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் எந்த நெட்வொர்க் அழைப்புகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி பேச முடியும். அதேசமயம் இதன் ரூபாய் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.222(1 மாதம்), ரூ.333(2 மாதம்), ரூ.444(3 மாதம்) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிளான்களில் அன்லிமிடெட் கால்களும், தினமும் 2 ஜிபி இணைய சேவை டேட்டாவும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் இந்த புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post