ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். நிலச்சரிவு அபாயம் உள்ள 67 இடங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆராய 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழையின் போது வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post