சேலத்தில் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவிற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைவாசல் கூட்டு ரோட்டில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பளவில், உலகத் தரம் வாய்ந்த நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் டாக்டர்.எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 396 கோடி ரூபாய் மதிப்பில் அமையப்படவுள்ள இந்த பூங்காவில் மருத்துவமனை, பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்களை பதப்படுத்தும் கூடம் மற்றும், பயிலரங்கமும் அமையவுள்ளது. இந்த நிலையில், பூங்காவிற்கான முன்சாத்தியக்கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நபார்டு நிறுவனத்துக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post